கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்களாக வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் நியமனம்

தி.மு.க.நிர்வாகிகள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்;

Update: 2022-09-29 17:01 GMT

திருக்கோவிலூர், 

தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 71 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒரு பெண் உள்பட 22 பேர் அமைச்சர்கள் ஆவார்கள். இது தொடர்பாக, தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவராக ராமமூர்த்தி, செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் (பொது) அண்ணாதுரை, துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) காமராஜ், துணை செயலாளர் மகளிர் புவனேஸ்வரி, பொருளாளர் கோவிந்தராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயற்குழு உறுப்பினர்களாக எத்திராசு, முருகன், பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜேந்திரன், ராஜீ, மணிமாறன், மஞ்சுளா கணேசன், ஒன்றிய செயலாளர்களாக திருக்கோவிலூர் மேற்கு கிருஷ்ணமூர்த்தி, வடக்கு அய்யனார், தெற்கு ராஜேந்திரன், ரிஷிவந்தியம் வடக்கு துரைமுருகன், தெற்கு பெருமாள், கிழக்கு பாரதிதாசன், சங்கராபுரம் வடக்கு அசோக்குமார், கள்ளக்குறிச்சி தெற்கு வெங்கடாசலம், தியாகதுருகம் வடக்கு நெடுஞ்செழியன், தெற்கு அண்ணாதுரை, சின்னசேலம் கிழக்கு சத்தியமூர்த்தி, தெற்கு கனகராஜ், கள்ளக்குறிச்சி நகர செயலாளராக சுப்ராயலு, பேரூர் செயலாளராக தியாகதுருகம் மலையரசன், மணலூர்பேட்டை ஜெய்கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவராக மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., செயலாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., துணை செயலாளராக (பொது) ஆறுமுகம், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்)திருநாவுக்கரசு, துணை செயலாளர் (மகளிர்) பாப்பாத்தி, பொருளாளராக ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக கமரூதீன், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்களாக செல்லையா, ஆசிர்வாதம், துரைராஜ், அருள்மொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர்களாக உளுந்தூர்பேட்டை கிழக்கு வைத்தியநாதன், மேற்கு ராஜவேல், திருநாவலூர் மேற்கு முருகன், கிழக்கு வசந்தவேல், திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு சந்திரசேகரன், சங்கராபுரம் தெற்கு ஆறுமுகம், கல்வராயன்மலை வடக்கு கிருஷ்ணன், தெற்கு சின்னதம்பி, சின்னசேலம் வடக்கு அன்புமணிமாறன், கள்ளக்குறிச்சி வடக்கு அரவிந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை நகர செயலாளராக செல்வம் டேனியல்ராஜ், பேரூர் செயலாளராக வடக்கனந்தல் ஜெயவேல், சின்னசேலம் செந்தில்குமார், சங்கராபுரம் தாகப்பிள்ளை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்