கஞ்சாவை ஒழிக்க சிறப்பு படைகள் நியமனம்

பெரம்பலூரில் கஞ்சாவை ஒழிக்க 2 சிறப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2022-12-14 19:09 GMT

சிறப்பு படைகள் அமைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தில் 2 சிறப்பு கஞ்சா ஒழிப்பு படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நியமித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளையும் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் நேற்று சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

ரோந்து பணி

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் (தலைமையிடம்), போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் (பெரம்பலூர் உட்கோட்டம்), பெரம்பலூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் குழுவினர் பெரம்பலூரை சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில், மாவட்ட போலீஸ் துறையால், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயிரிடுவது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்