தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரையும் கடந்த 17-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்தவகையில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.