போலி பேராசிரியர்கள் நியமனம்: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி

போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என பொன்முடி தெரிவித்தார்.

Update: 2024-08-24 22:45 GMT

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் அமைச்சர்கள் பொன்முடி, மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது,

இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். போதை கலச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்