ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் நியமனம்
அதிமுக வில் தலைமை போட்டி நடைபெறும் சூழலில், 14 மாவட்ட செயலர்களை நியமிப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக வில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையே யார் தலைமை ஏற்பது என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் 14 மாவட்ட செயலர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம்அறிவித்துள்ளார்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட செயலராக ஆர். தர்மரும், கோவை மாநகர் மாவட்ட செயலராக கோவை செல்வராஜும், மதுரை மாநகர் மாவட்ட செயலராக முன்னாள் எம்.பி., ஆர்.கோபாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலராக கொளத்தூர் கிருஷ்னமூர்த்தியும், சென்னை புறநகர் மாவட்ட செயலராக வெங்கட்ராமனும், எம்.எம்.பாபு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலராகவும், அம்பிகாபதி தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராகவும், ரமேஷ் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜ்மோகன் திருச்சி புறநகர் மாவட்டசெயலராகவும், மதியளகன் வடசென்னை தெற்கு( மேற்கு) மாவட்ட செயலராகவும், அசோகன் சிவகங்கை மாவட்ட செயலராகவும், ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் மாவட்ட செயலராகவும், சிவலிங்கமுத்து திருநெல்வேலி புறநகர மாவட்ட செயலராகவும், தவசி தென்காசி தெற்கு மாவட்ட செயலராகவும், நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலர்களுக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் அறிக்கையில் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.