இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-25 14:37 GMT

இ-சேவை மையம்

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 398 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

இணைய முகவரி

இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட https://tnesevai.tn.gov.in/ அல்லது https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30-06-2023 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (யூசர் ஐடி, பாஸ்வேர்டு) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

மேலும் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் அல்லது https://tnega.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்