சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-21 18:03 GMT

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் உலக சுற்றுலா தினமான 27.9.2022 அன்று விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 26-ந்தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் உதவி சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்