பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்ைத சேர்ந்தவர்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-01-12 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்ைத சேர்ந்தவர்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுமை சாம்பியன் விருது

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பணமுடிப்பும் வழங்க உள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்றுமாசு குறைத்தல், நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இதர பசுமை ரீதியான சாதனைகள் ஆகிய தலைப்புகளில் ஈடுபட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதிவாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.

விண்ணப்பம்

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tnpcb.gov.in என்ற தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின், நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 15.4.2023-ந்தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்