பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-28 19:28 GMT


பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேம்பாட்டு திட்டம்

2023-24-ம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாயம் மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 300 மற்றும் பிற விவசாயிகள் 140 பேர் என மொத்தம் 440 செயல்படுத்தப்பட உள்ளது.

பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்த அல்லது அருகில் உள்ள 2 அல்லது 3 கிராமங்களை சேர்ந்த குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 கொண்ட தொகுப்பினை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் ஒரு பேருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500-ம், 2-வது ஆண்டு ரூ. 17 ஆயிரமும், 3-வது ஆண்டு ரூ.16,500-ம் வழங்கப்படும்.

உழவர் செயலி

பாரம்பரிய விவசாயம் மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள் குழுவாக சேர்ந்து, பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ. 2,000, 2-வது ஆண்டு ரூ.2,000, 3-வது ஆண்டு ரூ.2,000 என மொத்தம் ஒரு எக்டேருக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1000 குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ. 1,500, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ. 700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ. 12,000 மற்றும் விளம்பரச் செலவினங்கள் ரூ. 1300 என மொத்தம் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ. 16,500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவர் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்