விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-08-19 10:47 GMT

விரைவாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கல் (தட்கல்) திட்டத்தின் மூலம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் விண்ணப்பத்தாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள் மற்றும் தற்போது புதிதாகவும் விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்து இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி செயற்பொறியாளர், இயக்குதலும் பராமரித்தும் அவர்களிடம் தங்கள் இசைவினை தெரிவித்து பணம் செலுத்தி பயனடையலாம்.

மேற்கண்ட தொகையினை "மேற்பார்வை பொறியாளர் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், திருவண்ணாமலை" என்ற பெயரில் திருவண்ணாமலையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையாக செலுத்த கேட்டு கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜு தெரிவித்துள்ளார்.

இதேபோல் போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று போளூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்