ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராணுவ கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-09 18:45 GMT

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சேரலாம். இதற்கு விண்ணப்பிக்க 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு 3.12.22 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பம் தகவல் தொகுப்பேடு பெற கட்டண தொகை ரூ.600-க்கு வங்கி வரைவோலையுடன் கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் -248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கு வரைவோலை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர் சென்னை-3 என்ற முகவரிக்கு 15.10.22-க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in இணையதளத்தை பார்க்கவும். மேலும் விபரம் அறிய ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை அணுகலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்