சமூக நல அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நல அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-11 08:07 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் தனியார் நிறுவனங்கள், பல்வேறு வணிக கடைகளில் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை புகாராக தெரிவிக்க 'சகி' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த சேவை மையத்தில் பணிபுரிய திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர முகவரியை கொண்ட தகுதி பெற்ற பெண் நபர் ஒப்பந்த பணியாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் பணி புரிய விரும்பும் பெண்கள் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுய விவரங்களுடன் 23-05-2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொழிற்நுட்ப பணியாளர்கான தகுதி:- டிப்ளமோ கம்ப்யூட்டர் கல்வி தகுதியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்ச்சி பெற்று அரசு அல்லது அரசு சாரா நிர்வாகங்களில் டேட்டா மேனேஜ்மென்ட், ப்ராசஸ் டாக்குமெண்டேஷன், வெப் பேஸ்டு, போன்ற பணிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.18 ஆயிரம். வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வழக்குப் பணியாளருக்கான தகுதி:- சமூக பணியில் இளங்கலை பட்டம், சமூகவியல், சமூக அறிவியலில் இளங்கலை பட்டம், உளவியல், சட்டம், கல்வி தகுதியுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.12 ஆயிரம். வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் 2-ம் தளத்திற்கு நேரில் சென்று விவரங்களை பெறலாம். அல்லது 04429896049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்