'மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்' - கே.பாலகிருஷ்ணன்

கட்சி ஆரம்பிக்க நடிகர் விஜய்க்கு உரிமை உள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2024-02-02 16:58 GMT

கோவை,

நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து மார்க்சிஸ்ர் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தங்கள் கொள்கைகளை மக்களிடம் சொல்லலாம். மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

கட்சி ஆரம்பிக்க நடிகர் விஜய்க்கு உரிமை உள்ளது. அவர் தனது உரிமையை பயன்படுத்தட்டும். அவருக்கென ஒரு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை அவர் பயன்படுத்துவது நல்லதுதான்."

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்