துலுக்கர்பட்டி அகழாய்வில் பழங்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு

வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் 2-வது கட்டமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் பழங்கால தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-10-10 20:56 GMT

வள்ளியூர் (வடக்கு):

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியாற்று படுகையில் உள்ள துலுக்கர்பட்டியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 2-வது கட்டமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 1,900-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 1800-க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்டவைகளும் கிடைத்து உள்ளன.

தற்போது அகழாய்வில் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதாவது, உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாதுப்பொருட்கள், இரும்பு கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு தொல்பொருட்களான இரும்பு உளி, வளையம் போன்ற அரியவகை பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நம்பியாற்றங்கரையில் செழிப்பான நாகரிகம் இருந்தது உறுதிபடுத்தபட்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்