ஆண்டிப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம்
ஆண்டிப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
ஆண்டிப்பட்டி மேற்கு ஓடைத் தெருவில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.