தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்;
அவினாசி
அவினாசி ஒன்றியம் தண்டுக்காரபாளையம் அருகே குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 20 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா கோரி 57 நபர்கள் விண்ணப்பம் செய்ததிருந்தனர்இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிதிராவிடர் நத்தம் பிற்படுத்தப்பட்டோர் நத்த நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனைகள் ஒப்படைப்புக்கான இணைய வழிபட்டா 40 நபர்களுக்கு கடந்த 18.1.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 நபர்களுக்கும் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுசெய்து தற்பொழுது வரை பட்டாவழங்கப்படவில்லை. இதே நிலை தொடருமானால் அக்டோபர் 19 ஆம் காலை 10 மணி முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் பட்டா கேட்டு 17 குடும்பத்தினர.நேற்று தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் நந்தகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவினாசி போலீசார், பேச்சுவார்த்தை நடத்த தாசில்தாரிடம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து தாசில்தார், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர், ஆகியோர் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நகல் காண்பித்து 17குடும்பத்தினருக்கும் மேனுவல் பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர். இதன் காரணமாக போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
--