கோத்தகிரியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோத்தகிரியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-05-31 14:21 GMT

கோத்தகிரி


கோத்தகிரியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாரத்தான் போட்டி

உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி கோத்தகிரியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த கிஷோர், ரவிக்குமார், சிவன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பரிசுகள் வழங்கப்பட்டன

போட்டியில் கலந்து கொண்டவர்கள் காமராஜர் சதுக்கத்தில் இருந்து பாண்டியன் பூங்கா வரை ஓடிச் சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினா். மேலும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு புகையிலை ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், சீனியர் மாரத்தான் ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்