பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கனாங்குளம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் சங்கனாங்குளம் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னதம்பி, ஒன்றிய கவுன்சிலர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மன்னார்புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் சி.நம்பி நன்றி கூறினார்.