மதுரவாயல் போலீஸ் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரவாயல் போலீஸ் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருளை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மதுரவாயல் போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கோயம்பேடு துணை கமிஷனர் குமார் தொடங்கி வைத்தார். இதில் போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் இருந்து மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் வரை பேரணியாக சென்றனர். அப்போது கையில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.