மலேரியா தடுப்பு மருந்து தெளிக்கும் பணி
கொட்டையூர், வாழவச்சனூர் பகுதிகளில் மலேரியா தடுப்பு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
வாணாபுரம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வாழவச்சனூர், கொட்டையூர் கிராமத்தில் மலேரியா கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் செலின்மேரி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர்கணபதி ஆகிேயார் முன்னிலையில் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.
இதில் மாவட்ட துணை பூச்சியியல் வல்லுனர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு மலேரியா கொசு மருந்து அடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளையும், அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது,
பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, மழைக்காலங்கள் மற்றும் அதிகளவில் கழிவுநீர் தேங்கும் இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் கொட்டையூர் ஊராட்சி செயலாளர் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் பாலசேகர், பாண்டு, மணிமாறன், விமல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.