போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி
போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது;
மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் முன்னிலையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில் போதைப்பொருள் வாழ்க்கையை சீரழிக்கும். எதிர்காலத்தை வீணடிக்கும். போதை பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நல்வழிப்படுத்த வேண்டும். மாணவ சமுதாயத்தினரால் எதையும் சாதித்து காட்ட முடியும். நீங்கள் நன்றாக படித்து உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, பள்ளி தலைமை ஆசிரியை லீமாரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.