போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-03-05 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட இயக்க முகாம் நடைபெற்றது. முகாமில் கிராம மக்களுக்கு சித்த மருத்துவர்கள், திலகவதி அரியநாச்சி, முருகன் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 200 பேர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். முகாமில் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி முள்ளக்காட்டில் தொடங்கி காமராஜர்நகர் வழியாக எம்.சவேரியார்புரத்தில் நிறைவடைந்தது. மாணவர்கள் கையில் பதாகைகளுடன், போதைப் பொருள் ஒழிப்பு, சிறுசேமிப்பு மற்றும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், முள்ளக்காடு பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நிர்மல், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா சந்திரசேகர், உச்சினி மாகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா ரகுபதி, முள்ளக்காடு தொழிலதிபர்கள் பாலகிருஷ்ணன், சிவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தேவராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்