போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2023-02-04 20:47 GMT

மார்த்தாண்டம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தொடங்கி நடைபெற்றது. பேரணியை கன்னியாகுமரி போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 1,200 மாணவ, மாணவிகள் மற்றும் 250 ஆசியர்கள் பங்கேற்றனர். பேரணி போலீஸ் நிலையம், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் வழியாக கடற்கரைச் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில் அனைவரும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பேரணியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாய்சன், சாரண, சாரணிய சங்க தலைவர் சிந்துகுமார், செயலாளர் பிரதீஸ்குமார், பொருளாளர் இன்னொசன்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்