போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கடையநல்லூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் ஆகியோரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்களதுரை ஆகியோ தலைமை தாங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். நகர் முழுவதும் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.