போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சேக்தாவூத் தலைமை தாங்கினார். கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர்லால், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கும் ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்தனர்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.முடிவில் கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்