போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.குழந்தைசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கே.இந்திராணி வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.டி.கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ. மோகன்ராஜ் தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இசைவாணி கார்த்திகேயன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் குமரன், கல்வி குழு தலைவர் ஆதிலட்சுமி உள்பட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு தூண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.