போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பந்தலூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update:2023-10-23 00:30 IST


பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் ஊட்டி அமலாக்கப்பிரிவு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. போலீஸ் ஏட்டு சத்தியசீலன் கலந்துகொண்டு குடிபழக்கம் மற்றும் போதை வஸ்துகள் உபயோகப்படுத்தபடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் எவரேனும் போதைப் பொருள் விற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. போலீஸ்காரர் பழனிமுருகன் உள்பட வாகன ஓட்டுநர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்