போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
இந்த பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம் தலைமை தாங்கினார். சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சுஜின் மற்றும் போலீசார், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.