ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார விழா
புளயங்குடி அருகே பாம்புகோவில் சந்தையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார விழா நடந்தது.;
புளியங்குடி:
மதராஸ் உர நிறுவனத்தின் சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வார விழாவினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மற்றும் மரம் நடுவிழா பாம்பு கோவில் சந்தையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கூடுதல் துணை சூப்பிரண்டு மதியழகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை "மதராஸ் உர நிறுவனத்தின் சார்பில் கவுதமன், கூடுதல் மேலாளர் மதுரை மற்றும் துணை மேலாளர் கோவிந்தராசு ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பாம்பு கோவில் சந்தை பஷீர் அகமது, ஊராட்சி மன்ற தலைவர் சையது இப்ராஹிம், தலைமை ஆசிரியர் மாணிக்கம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.