அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி அரியலூர் கிளையின் சார்பில் கிளை மேலாளர் குமரவேல் தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் வேல்முருகன் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.