குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்குகள் நடந்து வருகிறது. அதன்படி குழந்தை பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத்துறை, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் திருச்சி ரெயில் நிலைய வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற வேண்டும். குழந்தைக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். ஊர்வலம் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் பிரதான நுழைவு வாயிலில் நிறைடைந்தது. ஊர்வலத்தின் போது பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.