ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற இருந்தது.
இதுகுறித்த ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
ரூ.1½ லட்சம் பறிமுதல்
அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் மற்றும் சால்வைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.