மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது
மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட செல்லம்மாள் என்ற மூதாட்டியை கடந்த 13-ந் தேதி 4 பேர் கொண்ட கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த குணா என்ற குணசேகரன், கரூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கரூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவர் சாலை விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.