திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு பிரமோற்சவம்
திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு பிரமோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருவாளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச (5) நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் லட்சுமி நரசிம்மர் கோவிலின் கொடிமரத்தின் எதிரே எழுந்தருளினார். இதை அடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளம் தாளம் முழங்கிட கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.