கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்
கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது;
திருவையாறு அருகே கடுவெளியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆகாசபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று ஆகாசபுரீஸ்வரருக்கும், மங்களாம்பிகைக்கும் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பஞ்சமுக தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாச்சாரியார்கள் சுரேஷ், துரைராஜன் யாக சாலை பூஜைகள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி, ஆய்வாளர் குணசுந்தரி, எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.