டி.டி.வி.தினகரன் தலைமையில் அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Update: 2023-07-30 16:03 GMT

சென்னை,

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்