சென்னை வண்டலூர் பூங்கா இன்று இயங்கும் என அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.;
சென்னை
இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க மக்கள் வருகை தருகின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் வண்டலூர் பூங்கா இன்று இயங்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.