சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Update: 2022-06-07 16:54 GMT

சிதம்பரம்

ஆனி திருமஞ்சனம்

சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் வரும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த 2 திருவிழாக்களையும் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் ஒன்று திரண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.

தேரோட்டம்

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. அடுத்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசனம் 6-ந் தேதியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதி வளாகத்தில், பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்