அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சங்கரன்பந்தலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.;
பொறையாறு:
பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடை தெருவில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா, மற்றும் மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விளக்கப பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெனார்த்தனம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி, தரங்கை பேரூர் செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க.. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்பொற்கால ஆட்சி அமையும் என்றார். இதில் தலைமை கழக பேச்சாளர் நல்லாற்று நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், உள்பட மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.