அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரண்

அண்ணாநகரில் ரவுடி கொலையில் 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.;

Update: 2022-08-28 08:08 GMT

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (வயது 30). ரவுடியான இவர் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று உள்ளது. தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அண்ணா நகர் நடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்த நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஆட்டோவில் செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சந்தீப்பை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ரஞ்சித் (25), அரவிந்த் (27), சரவணன் (30), ராஜா (23), தமீம் (24) ஆகிய 5 பேர் சரண் அடைந்தனர்.

சந்தீப் கொலைக்கான காரணம் குறித்து இவர்கள் 5 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்