பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர்- பிரதமருக்கு அண்ணாமலை நன்றி

நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், அர்ஜூன் முண்டாவுக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 15:16 GMT

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில்,

நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கும், பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டாவுக்கும் தமிழக பாஜக

சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் வின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்