பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை

தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது

Update: 2024-05-26 10:47 GMT

சென்னை,

தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற உள்ளது . இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்