சக்தி விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்
சக்தி விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.;
முக்கூடல்:
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு முக்கூடல் அருகே சடையப்பப்புரத்தில் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சக்திக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.