அண்ணா பல்கலைக்கழக மண்டல விளையாட்டு போட்டி:டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்
அண்ணா பல்கலைக்கழக மண்டல விளையாட்டு போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக 18-வது மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
2-வது இடத்தை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், 3-வது இடத்தை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் தேவராஜூ ஆகியோரை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
-----