அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கூட்டம்
திருச்சுழி அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.;
திருச்சுழி,
திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சியை சேர்ந்த எம்.ரெட்டியபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு குறித்த அனைத்து பணி விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் வரவேற்றார். இதில் பொதுமக்கள் திரளான பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராமலிங்கம் செய்திருந்தார்.