பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியில் 552 பேர் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியில் 552 பேர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் இருந்தும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் மற்றும் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஈசான்ய மைதானத்தில் இருந்தும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் இருந்தும் போட்டிகள் தொடங்கி, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நிறைவடைந்தது.
போட்டிகளை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 552 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.250 மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாணவியர் விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கலந்து கொண்டனர்.