அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக முற்றுகை போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக முற்றுகை போராட்டம்

Update: 2022-11-02 12:36 GMT

வெள்ளகோவில்.நவ.3-

வெள்ளகோவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக முற்றுகை போராட்டம் செய்தனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் நிலை 2 பதவிக்கு, 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணியில் அமர்த்தாமல், 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியில் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதை கண்டித்து நேற்று புதன் கிழமை மாலை வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கஸ்தூரி தலைமையில் வெள்ளகோவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் வெள்ளகோவில் வட்டார தலைவர் எஸ்.திவ்யா. செயலாளர் ஏ.கலா உட்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்