அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் வைக்கப்பட்டுள்ளது.;

Update:2023-03-14 10:36 IST

சென்னை,

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் வைக்கப்பட்டுள்ளது. 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டி முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனிதா நினைவு அரங்கம் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்