கால்நடை சுகாதார முகாம்

மருங்கூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார முகாம் நடந்தது.

Update: 2022-12-29 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் பெரோஸ்முகமது முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை நோய்களுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் அருணா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்