வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்... கடையை அடித்து நொறுக்கிய போதை வாலிபர் கைது

வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

Update: 2024-07-22 20:30 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (30 வயது). அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் சிப்ஸ், பன், பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினார். ஆனால் அதற்கு பணம் தராமல் அங்கிருந்து செல்ல முயன்றார்.

உடனே சிவகுமார், வாங்கிய உணவு பொருளுக்கு பணம் தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (26 வயது) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்